கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயத்தில் 29.01.2022 நடைபெற்ற அரையாண்டுத் தேர்வு!
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை – பிரான்சு அமைப்பின் வழிநடாத்தலில் இயங்கும் தமிழர் கல்வி கலை பண்பாட்டு நடுவம் – யேர்மனி அமைப்பின் ஏற்பாட்டில் 2022 ஆம் ஆண்டிற்கான அரையாண்டுத்தேர்வு சிறப்பாக யேர்மனியத் தமிழ்ப்பாடசாலைகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஈழத்தமிழர் வரலாறு உண்மைத்தன்மையுடன் பேணப்படவேண்டுமென்ற உயர்சிந்தனையில், திரிபுபடுத்தப்பட்ட பாடநூலை அறிமுகம் செய்த அமைப்பிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட யேர்மனியத் தமிழாலயங்கள் தமது மாணாக்கரின் தமிழ்க்கல்வியைச் செம்மைப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கும் முதற்தேர்வு இதுவென்பது இங்கு அடையாளப்படுத்த வேண்டியதொன்றாகும். இத்தேர்வினை தமிழ்க் கல்வி கலை பண்பாட்டு நடுவம் முன்னெடுத்து நடாத்துகிறது,
ஈழத்தமிழரின் வரலாற்றினைப் பாதுகாத்தபடி, தமிழீழத்தேசியத் தலைவரின் வழிநடாத்தலில் உருவாக்கப்பட்ட தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை நடாத்தும் தேர்வினை நடாத்தும் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவச்செல்வங்கள் அனைவரையும் உளமார வாழ்த்துவதோடு, தங்களது சீரிய செயற்பாடு சிறப்புறும் வகையில் தொடர்ந்து பயணிக்குமாறு வேண்டுகிறோம்.
தமிழர் கல்வி கலை பண்பாட்டு நடுவம் – யேர்மனி