போர் ஏற்பட்டால் ரஷ்யாவுடன் இணைனந்து போராடுவோம்! இனி வெற்றியாளர் இருக்கமாட்டார்கள்! பெலாரஸ் அதிபர் எச்சரிக்கை!!
உக்ரைனுடன் போரை ரஷ்யா தொடங்கினால் ரஷ்யாவுடன் இணைந்து பெலாரஸ் போராடும் என்று அலேக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
ரஷ்ய உயர்மட்ட தூதுவர் ஒருவர் உக்ரைனுடன் ரஷ்யா போருக்குச் செல்லும் எண்ணம் இல்லை எனக் கூறிய பின்பு இன்று வெள்ளிக்கிழமை அவர் இந்த நிலைப்பாட்டினை அலேக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்திருக்கிறார்.
பெலாரஸ் அல்லது ரஷ்யா தாக்கப்பட்டால் நூறாயிரக்கணக்கான ரஷ்ய படை வீரர்களை பெலாராஸ் நாட்டுக்குள் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெலாரஸ் மீது ஆக்கிரமிப்பு நடந்தால், நூறாயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் இருப்பார்கள். நூறாயிரக்கணக்கான பெலோருசியர்களுடன் சேர்ந்து, இந்த நிலத்தைப் பாதுகாப்பார்கள் என்றார்.
இன்று வெள்ளிக்கிழமை ரஷ்யா போரை விரும்பவில்லை என்று கூறிய ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவைப் போலவே, மோதல் ஒன்று ஏற்பட்டால் வெற்றியாளர்கள் இருக்க மாட்டார்கள். எல்லோரும் அனைத்தையும் இழக்க நேரிடும்எல்லோரும் அனைத்தையும் இழக்க நேரிடும் என்று லுகாஷென்கோ எச்சரித்தார்.
அண்மைய வாரங்களில் உக்ரைன் எல்லையில் 100,000 ரஷ்ய துருப்புக்கள் குவிக்கப்பட்டதை அடுத்து, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவும் நேட்டோவும் எச்சரித்துள்ளன.
உக்ரேனை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டம் எதுவும் இல்லை என ரஷ்யா மீண்டும் மீண்டும் மறுத்துள்ளது. 2014 இல் கிரிமியாவை படைகளை அனுப்பி ரஷ்யா தன்னுடன் உத்தியோகபூர்வமாக இணைத்தது. உக்ரைனின் கிழக்கில், ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை கட்டுப்படுத்துகின்றனர்.
நேட்டோவில் இருந்து உக்ரைன் விலக்கி வைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவாதத்தை மாஸ்கோ கோரியுள்ளது, இது கிரெம்ளின் ஒரு பரந்த ரஷ்ய-எதிர்ப்பு இராணுவக் கூட்டணியாகக் கருதுகிறது.மேலும் ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகே ஆயுதங்களை மேற்குலம் நிலைநிறுத்துகிறது என ரஷ்யா கருதுகிறது.