மக்களிற்கு சைக்கிள்:அமைச்சர்களிற்கு சொகுசு கார்!
இலங்கை அரசாங்கம் துவிச்சக்கர வண்டியில் வேலைக்குச் செல்லுமாறு மக்களுக்கு முன்மொழிவதாகவும், ஆனால் அவ்வாறு செல்பவர்கள் ஏ8 போன்ற சொகுசு வாகனங்களில் செல்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திருட்டு, லஞ்சம், ஊழல், மோசடிகள் காரணமாகவே தற்போது தலைவர்கள் பதவி விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கொவிட் அனர்த்தம் காரணமாக எமது நாடு பாரிய தொற்று நோயை எதிர்நோக்கியிருந்த வேளையில் நாட்டின் காலாவதியான அரசியலை மாற்றியமைத்து எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாட்டுக்கு மதிப்பைக் கூட்டியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளையும் அதில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ராஜபக்ச அரசில் சுபீட்ச தரிசனத்துக்குப் பதிலாக அவலப் பார்வை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பால் மா, எண்ணெய், சீமெந்து போன்ற வற்றுக்காக நாடு முழுவதும் வரிசைகள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.