உக்ரைன் மீது ரஷ்யா தாக்கினால் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயுத் திட்டம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை!!
உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தால் ஐரோப்பாவுக்கு எரிவாயுவை அனுப்பும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 என்கின்ற கடலுக்கடியிலான எரிவாயு குழாய் திறப்பதை அமெரிக்கா நிறுத்தும் என அச்சுறுத்தியுள்ளது.
ரஷ்யா வேறு வழியில் உக்ரைனை ஆக்கிரமித்தால், நோர்ட் ஸ்ட்ரீம் 2 திட்டம் முன்னேறாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதிட்டத்தை ரத்து செய்ய அமெரிக்காவிற்கு அதிகாரம் இருக்குமா? என்ற கேள்விகள் உள்ளன. ஏனென்றால் இத்திட்டம் ஜேர்மனியுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம்.
நாங்கள் ஜெர்மனியுடன் இணைந்து செயல்படுவோம், அது முன்னேறாமல் இருப்பதை உறுதி செய்வோம் என்றுஅமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பிரைஸ் கூறினார்.
இதேநேரம் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் யேர்மனியில் இருந்து இயக்கப்படும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 திட்டத்திற்கு தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என பேர்லினில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ரஷ்யாவின் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கு மேற்கு நாடுகள் இத்திட்டதில் கை வைப்பார்கள் எனக் கூறுகின்றனர்.
ஆனால் சமீபத்திய வாரங்களில் உக்ரேனின் எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்கள் குவிக்கப்பட்டிருப்பது பதட்டங்களைத் தூண்டியது மற்றும் படையெடுப்பு பற்றிய அச்சத்தை அதிகரித்துள்ளது.