November 23, 2024

சைக்கிளில் வேலைக்கு செல்லும் கோத்தா!

சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு சலுகைகளை வழங்குவதற்கான ஒழுங்குமுறை வேலைத்திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

காற்று மாசைக் குறைக்கவும், நேர விரயத்தைத் தடுக்கவும் தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங் களுக்காக சைக்கிள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது ஒரு வாகனம் ஒன்றுக்கு கிலோமீற்றருக்கு ரூ.103.56 அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

துவிச்சக்கரவண்டியைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு கிலோமீற்றருக்கு 236 ரூபாவை மீதப்படுத்த முடியும் எனவும் அரசாங்கத்துக்கு 339 ரூபா இலாபத்தை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert