November 23, 2024

மக்டொனால்டில் கோவிட் ஹெல்த் பாஸ் கேட்டபோது துப்பாக்கியை நீட்டிய வயோதிபர்!!

இத்தாலியில் 88 வயதான வயோதிபர் மக்டொனால்ட் உணவகத்திற்கு உணவு உண்ணச் சென்ற வேளை நுழைவாயிலில் கொவிட் தடுப்பூசி போட்டதற்கான கீன் பாஸை காண்பிக்குமாறு பாதுகாவலர் கேட்டபோது, குறித்த வயோதிபர் துப்பாக்கியை எடுத்து பாதுகாவலர் நோக்கி நீட்டியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

நேபிள்ஸின் புறநகரில் உள்ள கசோரியாவில் உள்ள ஒரு மெக்டொனால்ட் உணவகத்திற்கு வெளியே இச்சம்வம் நடந்திருக்கிறது.

பாதுகாவலரிடம் துப்பாக்கியை நீட்டிய வயோதிபர் தனது முடிவை மாற்றிக்கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.

மக்டொனால்ட் பாதுகாப்பு காவலர் உடனடியாக சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவித்தார். 

அவர் வழங்கிய தகவல்கள் அடிப்படையில் குறித்த சந்தேக நபரை அடையாளம் காண்டனர் காவல்துறையினர்.

வயோதிபரின் வீட்டுக்கு காவல்துறையினர் சென்றபோது அவர் வீட்டுக் கதவை திறக்க மறுத்துள்ளார். காவல்துறையினர் வீட்டுக்கு அதிமதிக்கவில்லை. பின்னர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் வீட்டின் கதவை காவல்துறையினர் உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர். வயோதிபர் கைது செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் 11 ரவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இத்தாலியின் சமீபத்திய கட்டுப்பாடுகளின் கீழ், பார்கள் மற்றும் உணவகங்கள் வாடிக்கையாளர்கள் „சூப்பர் கிரீன் பாஸ்“ காட்ட வேண்டும், இது அவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதா அல்லது சமீபத்தில் நோய்த்தொற்றில் இருந்து மீண்டுவிட்டார்கள் என்பதை நிரூபிக்கிறது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert