November 23, 2024

உலகப் போரில் காணாமல் போன விமானம் – 77 ஆண்டுகளுக்கு பின் இமயமலையில் கண்டுபிடிப்பு!

இரண்டாம் உலகப் போரின் போது காணாமல் போன அமெரிக்க விமானத்தை தற்போது இமயமலையில் கண்டுபிடித்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் இந்திய சீனா மற்றும் மியான்மர் நாடுகளில் விழுந்து காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. மாயமான விமானங்கள் எங்கு விழுந்தது என தெரியாமல் இருந்ததாக கூறுகின்றனர். அந்த வேளையில் வானிலை மோசமாக காணப்பட்டதால் அவை அருணாச்சல பிரதேசத்தில் இமயமலையில் விழுந்திருக்கலாம் என தகவல் வெளியானது.

இதனிடையில் மாயமான  விமானத்தினை தேடும் பணியில் விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் மகன் தற்போது இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.நியூயார்க் நகரை சேர்ந்த அந்த நபர் விமான தேடுதல் பணியினை மலையேற்ற சாகச வீரரான கிளேட்டன் குக்லேஸ் இடம் ஒப்படைத்திருந்தார். அதன் அடிப்படையில் தனது குழுவினருடன் குக்லெஸ் இமயமலை பகுதியில் விமானம் குறித்த தேடுதல் வேட்டையில் தொடர்நது ஈடுபட்டுவந்தார்.  இந்த பயணத்தில் குக்லேஸ் உள்ளூர் வழிகாட்டிகள் குழுவும் இணைந்து இமயமலை உச்சியில்  முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.  

இந்த நிலையில், கடும் முயற்சிக்கு பின்னர் பனி மூடிய பகுதியில் கிடந்த போர் விமான பாகத்தை இந்த குழு நேற்று கண்டுபிடித்தது. பனி படர்ந்த பாறைகளுக்கு நடுவே விமான வால்பகுதியில் இருந்த  குறியீட்டு எண்ணைக் கொண்டு அடையாளம் காண முடிந்தததாக கிளேட்டன் குக்லெஸ் தெரிவித்துள்ளார். விமானம் காணாமல் போய் 77 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து  கிளேட்டன் குக்லெஸ் கூறுகையில், சிதைந்த நிலையில் காணப்படும் எஞ்சியிருந்த விமான பாகங்களில் மனிதர்கள் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை என்கிறார். இந்த நிலையில் இரண்டாம் உலகப்போரில்  போது காணமல் போம் போர் விமானம் 77 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டில் இதே விமானத்தை தேடும் முயற்சியின் போது பனிப்புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் எதையும் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert