November 23, 2024

அமெரிக்க இராணுவ தளபாட உதவிகள் உக்ரைனை வந்தடைந்தன!

ரஷ்யாவுடனான மோதலுக்கு மத்தியில் உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உறுதியளித்த இராணுவ உதவியின் முதல் தொகுதி உக்ரைனின் தலைநகர் கியிவ் வந்தடைந்ததாக அமெரிக்கா கூறுகிறது.

பால்டிக் மாநிலங்களான எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியாவின் அமெரிக்கத் தயாரிப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு வாஷிங்டன் ஒப்புதல் அளித்துள்ளது. 

நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தலைநகர் கிவ்யில் உள்ள அமெரிக்க தூதரகம் உக்ரைனின் முன்னரங்கப் பாதுகாப்புக்குத் தேவையான 90 தொன் எடையுடைய இராணுவ தளபாட உதவிகள் அமெரிக்காவிலிருந்து வந்ததாகக் கூறிய ஒரு சரக்கு விமானத்தின் புகைப்படங்களை ட்வீட் செய்தது.

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு முகங்கொடுக்கும் வகையில் உக்ரைன் அதன் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் அமொிக்க அர்ப்பணிப்பை நிரூபிப்பதாக ருவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க உக்ரைனின் ஆயுதப் படைகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தொடர்ந்து இதுபோன்ற உதவிகளை வழங்கும் என்றார்.

உக்ரைன் பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் அமெரிக்கா உதவிக்கு நன்றி தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert