தனியாகப் பறந்து உலகைச் சுற்றி வந்த இளம் பெண் வானோடி
ஐந்து மாத சவாலுக்குப் பிறகு வானோடி ஒருவர், தனியாகப் பறந்து உலகைச் சுற்றி வந்த இளம் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் 19 வயதுடைய ஜாரா ரூதர்ஃபோர்ட்.
ஜாரா ரூதர்ஃபோர்ட் கடுமையா வானிலையின் விளைவாக திட்டமிட்டதை விட இரண்டு மாதங்கள் கழித்தே பெல்ஜியத்தில் உள்ள கோர்ட்ரிஜ் வெவெல்ஜெமில் தரையிறங்கினார்.
பயணத்தின் போது அவர் அலாஸ்காவின் நோமில் ஒரு மாதமும், ரஷ்யாவில் 41 நாட்களும் தங்கியிருந்தார்.
பெல்ஜியம் திரும்பியதும், வின்செஸ்டரில் உள்ள செயின்ட் ஸ்விதுன்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவியை அவரது குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் வரவேற்றனர்.
பெல்ஜிய ரெட் டெவில்ஸ் ஏரோபாட்டிக் டிஸ்ப்ளே டீமில் இருந்து நான்கு விமானங்கள் அவருடைய வகமானத்துடன் தரையிறங்கியன.
கடந்த ஆண்டு தொடங்கிய பறப்பு ஐந்து கண்டங்களில் 60 இடங்களில் தரித்து இறுதியாக பெல்ஜியத்தை வந்தடைந்தார்.
பிரிட்டிஷ்-பெல்ஜிய விமானி, அவரது பெற்றோர் இருவரும் வானோடிகள் என்பது குறிப்பித்தக்கது.