ரஷ்யத் துருப்புக்கள் மேற்கு நோக்கி நகர்கிறது! எந்தநேரத்திலும் உக்ரைன் ஆக்கிரமிக்கலாம்!!
உக்ரைனை ரஷ்யா எந்தநேரத்திலும் ஆங்கிரமிக்கக்கூடும் என அமொிக்கா கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
ரஷ்யா போர்ப் பயிற்சிகள் என்ற போர்வையில் துருப்புக்களை மேற்கு நோக்கி நகர்த்துகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் ரஷ்யாவின் துணைப் பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின், பெலாரஸுடனான கூட்டுப் பயிற்சிகள் வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அசோசியேட்டட் பிரஸிடம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் எல்லையில் 100,000 துருப்புகளைக் ஏற்கனவே குவித்துள்ளது. தற்போது பெலாரஸுக்குள் கூட்டுப் பயிற்சிக்காக ரஷ்யப் படைகளை ரஷ்யா நகர்த்துகிறது.
இந்நிலையில் இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்பது எங்கள் கருத்து, ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனில் தாக்குதலை நடத்தக்கூடிய கட்டத்தில் இருக்கிறது என அமொிக்காவின் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென்பசாகி கூறினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் இந்த வாரம் உக்ரைனுக்குச் சென்று ரஷ்ய வெளியுறவு மந்திரி லாவ்ரோவை ஜெனீவாவில் சந்திப்பார். ரஷ்ய படையெடுப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பதட்டங்கள் அதிகரிக்கும்.
ஆண்டனி பிளிங்கன் (Antony Blinken) இன்று புதன்கிழமை உக்ரைனின் தலைநகருக்குச் சென்று அதிபர் வொளொடிமீர் செலன்ஸ்கீ (Volodymyr Zelenskyy_ மற்றும் வெளியுறவு மந்திரி டிமிற்ரோகுலேபா (Dmytro Kuleba) ஆகியோரை சந்தித்து உக்ரேனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தவுள்ளார் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளியன்று ஜெனிவாவில் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவையும் பிளின்கன் சந்திப்பார் எனவும் அங்க இராஜதந்திர பேச்சுக்களைத் தொடர்வார் என ஒரு மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி கூறினார்,
வெள்ளியன்று லாவ்ரோவைச் சந்திப்பதற்கு முன், ரஷ்யாவுடனான பேச்சுக்கள் மற்றும் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தடுக்கும் முயற்சிகள் குறித்து வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் உடன் விவாதிக்க பிளிங்கன் வியாழன் அன்று கியேவில் இருந்து பெர்லினுக்குச் செல்கிறார். அவர் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அதிகாரிகளையும் சந்திப்பார் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஐரோப்பாவில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இப்பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. எனினும் குறித் பேச்சுக்களை அதிகரித்துவரும் பதட்டங்களை சிறிதளவும் தணிக்கச் செய்வில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கதது.
இதேநேரம் உக்ரைனை ஆக்கிரமிக்க சாக்குப்போக்கான காரணங்கைள உருவாக்க ரஷ்யா தயாராகி வருகின்றது என அமெரிக்கா கூறிவருகின்றது. இதனை ரஷ்யா மறுத்துள்ளது.
நேட்டோவை முன்னாள் சோவியத் நாடுகளுக்கு விரிவுபடுத்தக் கூடாது என்ற கோரிக்கைக்கு அமெரிக்கா பதிலளிக்கும் என்று ரஷ்யா எதிர்பார்க்கிறது.