சாக்குப்போக்கைக் கூறி உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்கலாம் – அமெரிக்கா எச்சரிக்கை!!
உக்ரைன் மீது படை எடுப்பதற்கு சாக்குப் போக்கை உருவாக்க ரஷ்யா முயற்றி செய்து வருகிறது என அமெரிக்க அதிகாரிகள் ஏச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சாக்குப்போக்கை அரங்கேற்றுவதற்காக வெடிமருந்துகளில் பயிற்சி பெற்ற நாசகாரர்களை ரஷ்யா அனுப்பியதாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியது.
இராஜதந்திர முன்னெடுப்புகள் தவறினால் உக்ரைனில் மீது ஒரு படையெடுப்புக்குத் ரஷ்யா அரசாங்கம் தயாராகி வருகிறது. போர் ஒன்று தொடங்கினால் இது பரவலான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
படையெடுப்பிற்கு ஒரு சாக்குப்போக்கை உருவாக்குவதற்கான விருப்பத்திற்கு ரஷ்யா அடித்தளம் அமைத்துள்ளது. உக்ரேனிய அரசாங்க வலைத்தளங்கள் „பாரிய“ சைபர் தாக்குதலைத் தொடர்ந்து செயலிழந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை வந்தது.
பல்லாயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்கள் அண்டை நாட்டின் எல்லையில் குவிந்துள்ளதால், பல வாரங்களாக உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு சாத்தியம் என்று அமெரிக்க மற்றும் மேற்கத்திய அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்.
பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கையில்:-
ரஷ்ய ஆதரவுப் படைகளுக்கு எதிரான தாக்குதலுக்கு உக்ரேனைத் தயார் செய்வதாக ரஷ்யா சாக்குப் போக்கைக் கட்டமைக்க முடியும். இதே யுத்தியை நாங்கள் இதற்கு முன்னர் பார்த்திருக்கிறோம். குறிப்பாக 2014 இல் கிரிமியாவை சட்டவிரோதமாக இணைத்ததை சுட்டிக்காட்டினார்.
ஷ்ய இராணுவம் இராணுவப் படையெடுப்புக்கு பல வாரங்களுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இது ஜனவரி நடுப்பகுதி மற்றும் பிப்ரவரி நடுப்பகுதிக்கு இடையில் தொடங்கும் மேலும் கருத்துரைத்துள்ளார்.
அதிகரித்துவரும் நெருக்கடியை நிறுத்தும் நோக்கில் ஐரோப்பாவில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அமெரிக்காவின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அல்லது பிற முன்னாள் சோவியத் நாடுகளை உள்ளடக்கியதாக நேட்டோவை விரிவுபடுத்தக் கூடாது என்று ரஷ்யர்கள் கோரியுள்ளனர். ஆனால் அமெரிக்கா அத்தகைய கோரிக்கைகளை பேச்சுக்குத் தொடக்கமற்றவை என்று கூறுகிறதது.
உக்ரைனில் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை நிலைநிறுத்துவது மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க மற்றும் நேட்டோ இராணுவப் பயிற்சிகளுக்கு வரம்புகளை வைப்பது குறித்து மாஸ்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.