இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – இலங்கை தேசிய சுனாமி எச்சரிக்சை மையம் விடுத்துள்ள செய்தி
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலோ அல்லது எவ்வித பாதிப்போ இல்லை என்று இலங்கை தேசிய சுனாமி எச்சரிக்சை மையம் தெரிவித்துள்ளது.
ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நிலநடுக்கம் தீவின் மேற்கு பகுதியினை GMT 09.05 மணியளவில் 37 கிலோ மீட்டர் (23 மைல்) ஆழத்தில் தாக்கியுள்ளது.
எனினும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.