Dezember 3, 2024

பழிக்குப்பழி:மைத்திரி சவால்!

 சந்தைக்குச் சென்றவுடன் சுசில் பிரேம ஜயந்தவுக்கு 24 மணித்தியாலங்களில்  அதிர்ஷ்ட சீட்டு கிடைத்துள்ளது என்றும் நாடு முழுவதும் சென்று திரும்பும் போது தனக்கும் அதிர்ஷ்டச் சீட்டு கிடைக்கும் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையை உற்று நோக்கினால் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தைப் போல் தான் காணப்படுகின்றது என்றும் அன்றைய நாட்களில் விவசாயிகளுக்கு உரத்தை வழங்காமை மற்றும் வீட்டு பெண்கள் அடுப்பை மூட்டும் போது தகாத வார்தைகளால் பேசினர். அவற்றை செவிமடுக்க அன்று சிறிமாவோ பண்டார நாயக்க தயாராக இருக்கவில்லை.

நேற்று  நான் பேசியதைக் கேட்ட, சமூக ஊடகங்களில் சிலர், நீங்களும் அரசாங்கத்தை கொண்டு வழிநடத்தினீர்கள் தானே என கேள்வி எழுப்பியதாக அவர் தெரிவித்தார்.

 என்னுடைய அரசாங்கம் வேறுபட்டது என்றும் இன்று அரசாங்கத்தை நடத்துபவர்கள் அன்று தமது அரசாங்கத்தை எவ்வாறு தாக்கினார்கள் என்பது நினைவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அன்று தம்மை இழிவுபடுத்தியவர்கள் இன்று மக்களின் அவமானத்துக்கும் நிந்தைக்கும் உள்ளாளாகியுள்ளனர் தானே என அவர் கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert