லண்டனில் உயிருக்கு போராடும் இலங்கை தமிழர் வெளியிட்ட தகவல்!
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பிபிசி உலக சேவையின் செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா புற்று நோய் பாதிப்பில் போராடி வரும் நிலையில் அது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் தன்னை தனது மனைவியுடன் நெருக்கமாக்கியுள்ளதென ஜோர்ஜ் அழகையா விளக்கியுள்ளார்.
66 வயதான ஜோர்ஜ் அழகையா பிரித்தானியாவில் வசித்து வருகின்றார். ஜோர்ஜ் அழகையா தனக்கு நான்காம் நிலை குடல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதனை 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முறையாக அறிந்துக் கொண்டார். ஒக்டோபர் மாதத்தில் புற்றுநோய் அதிகரித்த நிலையில் அவர் பிபிசி செய்தி சேவை பணியில் இருந்து ஓய்வு பெற்று சென்றள்ளார்.
இந்த நிலையில் பிரித்தானிய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட ஜோர்ஜ் அழகையா, தான் வாழும் வாழ்க்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார். எனினும் புற்று நோய் தன்னை இறுதி வரை கொண்டு சென்றதாக கூறியுள்ளார்.
“என்னால் இந்த விடயத்திலிருந்து விடுபட முடியும் என நான் நினைக்கவில்லை. எனக்கு இன்னும் புற்றுநோய் இருக்கிறது. நான் மெதுவாக மீண்டு வர முயற்சிக்கின்றேன். ஒவ்வொரு முறையும் எனது மருத்துவர்கள் சிறப்பாக செயற்பட்டார்கள். எனது மருத்துவர்கள் ஒவ்வொரு முறையும் சிவப்பு பேருந்து முழுவதும் மருந்துடன் பின் தொடர்ந்தார்கள்.
எனினும் இறுதி வரை போராடும் நான் மிகவும் அதிஷ்டசாலியாகவே உணர்கின்றேன். இறுதி வரை போராடுவேன். எனினும் தான் வாழ வேண்டிய 7 ஆண்டுகள் புற்று நோயுடன் போராட வேண்டியிருந்தமை சற்று வருத்தமாகவே உள்ளது.
தற்போது நான் என் மனைவி ப்ரொன் குறித்தே சிந்திக்கின்றேன். அவரிடம் அனைத்தையும் கூறியுள்ளேன். அவரை விட்டுப் பிரியும் எண்ணத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நீங்கள் விரும்பும் பெண்ணின் எதிரில் அமர்ந்து அவருடனான பயணத்தை முடிக்க முடியாது என அவரிடம் கூறுவதற்கான வழியை கண்டுபிடிப்பது கடினம்.
எனினும் இந்த காலப்பகுதி எங்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியது. ஒருவருக்கொருவர் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும். மேலும், நாம் ஒன்றாகக் கற்பனை செய்த காரியம் நடக்காமல் போகலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ப்ரான்ஸ் என்ற பெண்ணை 36 வருடங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் சந்தித்த அழகையா அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருடன் ஒரு இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.