2022 இறுதிவரை போரிஸ் ஜோன்சன் பிரதமராக இருக்கமாட்டார்!!
2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிரதமராக இருக்கமாட்டார் என்று இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான பெரியவர்கள் கருதுவதாக புதிய கருத்துக்கணிப்பு வெளிவந்துள்ளது.கடந்தாண்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்திய கொரோனா முடக்க நிலையில் நாடே முடக்கியிருந்த நிலையில் போரிஸ் ஜோன்சனின் அரசாங்க அதிகாரிகள் கூட்டங்கள் மற்றும் விருந்துகளை நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் மக்கள் கோபம் அடைந்துள்ளர். அத்துடன் அவரது கன்சர்வேடிவ் கட்சிக்குள் ஜான்சனின் அதிகாரம் குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
Ipsos Mori இன்றுத திங்கட்கிழமை வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின் படி அடுத்தாண்டு இறுதிக்குள் போரிஸ் ஜோன்சன் தனது வேலையை விட்டுவிடுவார் என பத்துப் போில் ஆறுபேர் நினைத்ததாக கருத்துக்கணிப்பை கண்டறிந்துள்ளது.
இதேநேரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தி கார்டியன் செய்தித்தாள் போரிஸ் ஜோன்சன் டவுனிங் தெரு குடியிருப்பின் தோட்டத்தில் ஒரு டஜன் மக்களுடன் மது அருந்திய புகைப்படத்தை வெளியிட்டது. இப்புகைப்படம் 2020 ஆண்டு மே மாதம் 19 நாள் எடுக்கபட்டுள்ளது. அப்புகைப்படம் எடுத்த காலப்பகுதி கொரோனா பிரித்தானியா முழுவதும் முடக்கப்பட்ட நிலை நடைமுறையில் இருந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.