November 25, 2024

வரவு – செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றி!! முதல்வராகத் தொடர்கிறார் மணி!!

யாழ்ப்பாண மாநாகரசபையின் 2022 ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றியடைந்திருந்தது. இதன் மூலம் யாழ் மாநகரசபையின் முதல்வராக மணிவண்ணன் தொடர்கின்றார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16 பேர், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் 13 பேர், ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் 10 பேர், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 பேர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 2 பேர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒருவர் என மொத்தமாக 45 உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாநகர சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

இன்று புதன்கிழமை நடைபெற்ற வரவு – செலவு திட்ட வாக்களிப்பில் திட்டத்திற்கு ஆதரவாக 45 உறுப்பினர்கள் யாழ் மாநகர சபையில் 23 பேரின் ஆதரவு இருந்தால் வரவு செலவுத் திட்டம் நிறைவேறும் என்ற நிலையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 10 பேரும் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 பேரும் சிறீலங்கா சுதந்திர கட்சி 2 பேரும்  ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒருவரும் என 24 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் 16 பேரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 3 பேரும் ஐக்கிய தேசிய கட்சியின் இருவரும் வாக்களித்தனர்.

மக்கள் நலனைப் புறந்தள்ளி கட்சி நலன்களுக்காக 2020 ஆண்டுக்கான வரவு – திட்டத்தை தோல்வியுறச் செய்வதற்கு சில கட்சிகள் தொடர்ந்தும் முயற்சிகள் எடுத்திருந்த நிலையில் வரவு – செலவுத் திட்டம் வெற்றியடைந்திருந்து.