März 28, 2025

ஹைட்டியில் 60 பேர் பலி!

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டியின் இரண்டாவது பெரிய நகரத்தில் எரிபொருள் கொள்கலன் பாரவூர்தி வெடித்ததில் 60 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கேப்-ஹைடியன் நகரில் வாகனம் விபத்தில் சிக்கியதாகவும், அதில் எரிந்த போது கசிந்த எரிபொருளை சேகரிக்க பொதுமக்கள் முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிப்பில் காயமடைந்தவர்களால் உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

பிரதமர் ஏரியல் ஹென்றி, விபத்துக்குப் பிறகு முழு கரீபியன் தேசமும் துக்கத்தில் இருப்பதாக அவர் மூன்று நாட்கள் துக்கம் அறிவித்தார்.