நினைவேந்தப்பட்டது ஒதியமலைப் படுகொலை
முல்லைத்தீவு- ஒதியமலை கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க ஏற்பாட்டில், ஒதியமலை படுகொலை நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களுக்கு உறவுகளால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன், ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா, முன்னாள் வட.மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கொரோனா அச்சநிலை காரணமாக இந்த நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.
கடந்த 1984.12.02 அதிகாலை வேளையில், சுட்டும் வெட்டியும் இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.