தேசியத் தலைவர் புகைப்படத்தை பகிர்ந்தால் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுகிறது!
சமூக வலைத்தளங்களில் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தை பகிர்ந்ததற்காக அனைவரது முகநூல் கணக்குகளும் 3 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை முடக்கப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தற்போது எழுந்துள்ளது.
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்தநாளை உலகத் தமிழர்கள் அனைவரும் எழுச்சியுடன் இன்று கொண்டாடி வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் விதமாக அவரின் புகைப்படத்தை பரவலாக இன உணர்வாளர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் ஃபேஸ்புக்கில் தலைவர் பிரபாகரன் படத்தை பகிர்ந்து உடன், உடனடியாக, சம்பந்தப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தி வருகிறது.
அதில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் நீங்கள் புகைப்படத்தை பகிர வேண்டும் என்றும், நீங்கள் தடை செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளீர்கள், எனவே நீங்கள் ஃபேஸ்புக் சட்ட திட்டத்தை மீறியதால் உங்கள் பேஸ்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது என பேஸ்புக் நிர்வாகம் சம்பந்தப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவித்துள்ளது.
மேலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் புகைப்படத்தை பகிர்ந்த நபருக்கு 3 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிர்வாகத்தின் இந்த செயலால் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தடை செய்யப்பட்ட இயக்கம் என்று பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்த கருத்துக்களை, உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று இணையதளத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கீழ்த்தரமான செயலால் பேஸ்புக் நிர்வாகம் ஒரு போதும் எங்கள் இன உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.