தெறிக்கும் பங்காளிகள்:ஆட்சி கலையுமா?
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்துள்ள முன்னணி கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்ற நிலையில் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு மஹிந்த தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரகசிய கலந்துரையாடலில் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அமைச்சர் அலி சப்ரி ஆகியோரும் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர ஆகியோரும் இந்த வாரம் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இனியும் இந்த அரசாங்கத்தில் இருக்க முடியாது என்பதால் தான் இராஜினாமா செய்ய வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது ஒரு முட்டாள்தனமான அரசாங்கம் என டியூ குணசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளமையினால் பிரதமர் ஏனைய பிரதான கட்சி தலைவர்களுடன் அடுத்த வாரம் ஜனாதிபதியை சந்தித்து நேரடி கலந்துரையாடல் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது