விற்பனைக்கு வருகிறது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ?
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையை தனியார் துறைக்கு மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்போது ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது, அவற்றில் தரைச் செயற்பாடுகள் பிரிவு மற்றும் சரக்குப் பிரிவு ஆகியவை வருடத்திற்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுகின்றன.
விமானக் குத்தகைக் கொடுப்பனவுகள், எரிபொருள் செலவுகள் மற்றும் இதர செலவுகள் அதிகரிப்பதால் சேவை நஷ்டமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு விமானம் ஒரு மாதத்திற்கு 5-8 மில்லியன் டொலர்களை குத்தகை தவணைகளில் செலுத்த வேண்டியிருந்தது மற்றும் எரிபொருளுக்கான மொத்த செலவில் 25%.செலுத்தப்படவேண்டும்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நஷ்டம் நாட்டுக்கு பாரிய சுமையாக மாறியுள்ள நிலையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்குகளை தக்கவைத்து மீதியை தனியாருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக வரும் 9ஆம் திகதிக்குள் முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.