März 28, 2025

ஒரே நாடு , ஒரே சட்டம்:நேரே பரலோகம்!

ஒரே நாடு , ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணியை அறிவித்து ,அதன் தலைவராக பொதுபல சேனாவின் கலகொடஅத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள நிலையில் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களை இதனை கடுமையாக விமர்சித்துள்ளன.

ஒரே நாடு ,ஒரே சட்டம் என்ற விடயதானத்தினை,ஆராய்ந்து சட்டங்களில் மேற்கொள்ளவேண்டிய சிபாரிசுகளை செய்ய இந்த செயலணி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென அறிவித்துள்ள நிலையில் அச்செயலணி நேரடியாக பரலோகம் செல்லவாவெனவும் அவை கேள்வி எழுப்பியுள்ளன.

இந்த செயலணியில் முஸ்லிம் உறுப்பினர்கள் நால்வர் சேர்க்கப்பட்டுள்ள போதும் தமிழர்கள் எவருமேயில்லை.

இதனிடையே ஒரே நாடு – ஒரு சட்டம் ” கொள்கை அறிக்கை அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும் என அதன் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்