புத்திசாலிகள் கோத்தாவிற்கு தேவையில்லை!
ராஜபக்ஸ அரசாங்கத்தின் முட்டாள் தனங்களை கேள்விக்குள்ளாக்கும் பத்திஜீவிகள் தூக்கியெறியப்படுவது தொடர்கின்றது. சேதனச் செய்கை திட்டம் குறித்த உண்மைத் தகவல்களை வெளியிட்டமையினால் விவசாயக் கொள்கைப் பேரவையின் தலைவர் பேராசிரியர் புத்தி மாரம்பேவை அரசாங்கம் நீக்கியுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத்த விவசாயத்துறை பேராசிரியரான இவர், இந்த விடயப்பரப்பில் முதன்மையான முன்னோடி அறிஞர்களில் ஒருவராகப் புகழ் பெற்றவர் .
பேராசிரியர் புத்தி மாரம்பே, சேதன உரங்களைப் பற்றி அறிவியல் பூர்வமாக விளக்கங்களை முன்வைத்ததோடு,இந்த தீர்மானத்தால் நாட்டில் உணவுப் பாதுகாப்பிற்கு ஏற்படும் சவால்கள் தொடர்பாக விளக்கங்களை முன்வைத்தது அறிவியல் தரவுகளின் அடிப்படையியேயாகும்.
அரசாங்கத்திற்கு கட்டுக்கதைகளே தவிர விடய அறிவியல் என்பது ஆதாரம் அல்ல என்று கோவிட் கட்டுப்படுத்தலின் போது சுட்டிக்காட்டினார்கள்.
இதனிடையே பேராசிரியர் புத்தி மாரம்பேவை நீக்கும் முடிவை ஐக்கிய மக்கள் சக்தி கண்டித்துள்ளது.புத்திஜீவிகளின் பணி நாட்டுக்கும் மக்களுக்குமான பணியாக இருக்க வேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது.