November 22, 2024

ஆரம்ப பிரிவை திறக்கலாமெனில் ஏன் பல்கலை முடியாது?

ஆரம்ப பிரிவு மாணவர்களுடைய கற்றல் கற்பித்தல் நடவடிக்கைளை ஆரம்பிக்க முடியும் என்றால் ஏன் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க முடியாதென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்வித்துறையின் கட்டமைப்பு ஸ்தம்பிதம் அடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ளன.

ஒருபுறம் பல்கலைக்கழக கட்டமைப்பும் மறுபுறம் பாடசாலைக் கட்டமைப்பும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

ஆனால் இந்த காலப்பகுதிக்குள் பாடசாலையையோ அல்லது பல்கலைக்கழகத்தையோ ஆரம்பித்தல் தொடர்பான எந்த செயற்திட்டங்களும் அரசாங்கத்திடம் இருக்கவில்லை.

தற்போதைய நிலைப்பாட்டினுள் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தல் தொடர்பான ஆலோசனைகளை நாமும் அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தோம். ஆனால் அது தொடர்பில் அரசாங்கம் எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை.

மாறாக அவர்கள் நிகழ் நிலை கற்றல் கற்பித்தல் நடவடிக்கைளை மாத்திரமே முன்னெடுப்பதற்கான யோனையை முன்வைத்தனர்.

ஆரம்ப பிரிவு மாணவர்களுடைய கற்றல் கற்பித்தல் நடவடிக்கைளை ஆரம்பிக்க முடியும் என்றால் ஏன் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க முடியாது என அவர் கேள்வி எழுப்பபியுள்ளார்.