Mai 12, 2025

மீண்டும் வடக்கிழக்கிற்கு படையெடுக்கும் தூதர்கள்!

இன்றைய தினம் மட்டக்களப்பில் நோர்வே (Trine Jøranli Eskedal) மற்றும் நெதர்லாந்து (Tanja Gonggrijp) உயர்ஸ்தானிகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்.

சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள் அவர்  இதன்போது நமது மாவட்டத்தை எதிர்காலத்தில் முன்னேற்றும் செயல்பாடுகளில் முதன்மையான தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இயற்கை அழகுடன் காணப்படும் எமது மாவட்ட சுற்றுலா துறையை மேம்படுத்தும் பல திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அதன்போது மட்டக்களப்பில் நடைபெறும் காணி அபகரித்தல் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மண் அகழ்வு பிரச்சினை சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. இதற்கான ஆதாரங்களுடன் கூடிய ஆவணமும் கையளிக்கப்பட்டது.

அத்துடன் அவர்களிடம் ஓர் விசேட கோரிக்கை ஒன்றை முன்மொழிந்தேன் அவ் கோரிக்கையானது எமது பிரதேசங்கள் தொல்பொருள் எனும் பெயரில் காணிகள் சூறையாடப் படுவதை தடுக்கும் நோக்குடன் தொல்பொருள் சம்பந்தமான செயற்பாடுகள் அனைத்தும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் ஊடாக சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளேன்.  இதன்மூலம் நாம் எதிர்கொள்ளும் சட்ட விரோத காணி அபகரிப்பு போன்ற பிரச்சினைகளை தடுக்க முடியும். இன்றைய சந்திப்பானது சமகால அரசியல் பரிமாற்றத்துடன் முற்றுப்பெற்றதாக தெரிவித்துள்ளார்.