März 28, 2025

ரஷ்ய விமான விபத்து! பரசூட் சாகச வீரர்கள் 16 பேர் பலி!!

ரஷ்யாவில் பாராசூட் சாசக வீரர்களை ஏற்றி சென்ற எல் – 410 விமானம் மத்திய ரஷ்ய டாடர்ஸ்தான் பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்துள்ளனர் என  ஆர்ஐஏ செய்தி நிறுவனம் அவசர சேவைகளை மேற்கோளிட்டு செய்தியை வெளியிட்டுள்ளது.அந்த விமானத்தில் 20 பாராசூட் சாசக வீரர்கள் உட்பட  இரண்டு பணியாளர்கள் இருந்தனர்.

உள்ளூர் நேரப்படி காலை 9:23 மணிக்கு மென்செலின்ஸ்க் நகரில் விமான விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்தில் பயணம் செய்த 23 பேரில் ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர் என அவசரகால அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

விபத்து குறித்து வெளியான புகைப்படங்களில் விமானம் இரண்டாக உடைந்திருப்பது போல தெரிகிறது. குறிப்பாக, விமானத்தின் முன் பகுதி முழுமையாக நொறுங்கியுள்ளது.

அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஒருவரின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.