März 28, 2025

அலரி மாளிகையில் நவராத்திரி பூசையில் பங்கேற்கவுள்ள சுப்பிரமணிய சுவாமி

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) தலைமையில் அலரி மாளிகையில் எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நவராத்திரி பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்பூசை வழிபாடுகளில் இந்திய மத்திய அரசின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி (Subramanian Swamy) பங்கேற்கவுள்ளார்.

இதே வேளை இந்த வாழிபாடுகள் கொரோனா தொடர்பான சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.