எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை! பிரித்தானியப் போக்குவரத்துச் செயலாளர்
பிரித்தானியாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என போக்குவரத்துச் செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் கூறியுள்ளார்.மக்கள் விவேகமானவர்கள் எரிபொருள் தேவைப்படும்போது மட்டுமே நிரப்ப வேண்டும் என போக்குவரத்து செயலாளர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பகல், இரவு என எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் வாகனங்களுடனும் கொள்கலன்களுடனும் மக்கள் காத்திருந்து எரிருபொருள்களை நிரப்பிவருகிறார்கள்.
பல எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் பம்புகள் மூடப்பட்டு பணியாளர்களால் வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என பிரித்தானிய போக்குவரத்துச் செயலாளர் கூறியுள்ளார்.
தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியில் பாரவூர்த்தி (HGV) ஓட்டுநர்களுக்கான தற்காலிக நுழைவிசை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துவதாக னஷாப்ஸ் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுநோயின் தொடக்கத்தில் மக்களின் அச்சத்தால் கழிப்பறை கடதாசிச் சுருள்களை வாங்கி சேமித்தார்களோ அதுபோல் எரிபொருளை சேமிக்கத்தொடங்கியுள்ளதால் இப்பீதி எழுந்துள்ளது.
மக்கள் எரிபொருட்களை வீட்டில் சேமிப்பது என்பது மிகவும் என கடினம் இன்னும் சில நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என போக்குவரத்துச் செயலாளர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.