März 28, 2025

ஊசி போட்டபின்னரே பரீட்சை!

இலங்கையில் அவ்வாண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கத்திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஊரடங்கு உத்தரவை நீக்குவதற்கு முன்பு உடனடியாக மது விற்பனையை நிறுத்துமாறு இலங்கை மருத்துவ சங்கம் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அதில் மது விற்பனையை ஒன்லைனிலும் செய்யக்கூடாது எனவும் மதுக்கடைகளை திறப்பது குடும்ப வன்முறை மற்றும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.