Mai 12, 2025

இலங்கை சிறையில் கோசிலாவிற்கு கொரோனா!

கல்வி இராணுவமயப்படுத்தலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஆகஸ்ட் 3 ல் கைதாகிய அரசியல் செயற்பாட்டாளர் கோசிலா ஹன்சமாலி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.ஏற்கனவே ஆஸ்த்துமாவால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதால் இலங்கை சிறை அதிகாரிகளிடம் அவருக்கு உரிய சிகிச்சையை  மேற்கொள்ள  குடும்பத்தார் வேண்டிக்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள கோசிலா ஹன்சமாலி கடந்த ஒரு மாத காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.