18:டெலோ மத்திய குழு கூடுகின்றது!
தமிழ்த் தேசிய பரப்பில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டப்பின் பிளவு ஏற்படவுள்ளதாக வெளியாகின்ற கருத்துகள் தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதியன்று, மத்திய குழு கூடி ஆராயவிருப்பதாகவும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) டெலோ செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு தமிழ்த் தேசியப் பரப்பிலிருந்து பல முனைகளிலும் கடிதங்கள் எழுப்பட்டுள்ளன எனவும் இருந்தாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினாலும் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளினாலும் எழுதப்பட்ட கடிதங்களில் பல குழப்பங்கள் மக்கள் மத்தியில் இருக்கின்றன எனவும் கூறினார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிளவடைந்துவிட்டது என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிளவடையாது என்றும் கருத்துகள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கையில், ஒரு கட்சியினரை ஒரு கட்சியினர் வசைபாடிக் கொண்டும் இருக்கின்றனர் எனவும், ஜனா சாடினார்.
‚இந்நிலையில், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழுக் கூட்டம், மெய்நிகர் வழியாக, 11ஆம் திகதியன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இவ்விடயம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு, இந்தக் குழப்பத்துக்கு முடிவு காண்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
‚இதற்கமைய, இது சம்பந்தமாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்தியகுழு, எதிர்வரும் 18ஆம் திகதியன்று, மெய்நிகர் வழியாகக் கூடி தீர்க்கமான முடிவொன்றை எடுக்க இருக்கிறது‘ எனவும், அவர் தெரிவித்தார்.