Dezember 3, 2024

பிரித்தானியாவில் பாரவூர்தி ஓட்டுநர்கள் பற்றாக்குறை!! வெற்றிடமாகக் காட்சியளிக்கும் வணிக நிலையங்கள்!!

பொருட்களை எடுத்துவந்து விநியோகம் செய்யும் தொடர்புகள் பிரித்தானியாவில் மிகவும் ஆபத்தாக இருக்கின்றது. இந்த நெருக்கடி அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கான ஐரோப்பிய மையத்தைச் சேர்ந்துள்ளது.கொவிட், பிரெக்ஸிட் காரணங்களினால் பிரித்தானியாவில் பாரவூர்தி ஓட்டுநர்கள் பற்றாக்குறை புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. விநியோகப் பிரச்சினைகளால் பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக நிலையங்கள் அனைத்தும் பெரும்பாலும் பொருட்கள் இல்லாம் வெற்றிடமாக உள்ளது.

முக்கியமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதை அடுத்து ஐரோப்பிய ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். இதனால் பாரவூர்தி (HGV lorry) ஓட்டுநர்களின் நீண்டகால பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொருட்களுக்கான விநியோகம் சிக்கலாகியுள்ளது.

விநியோக நிறுவனங்களை நடத்துவோர் அதிக சம்பளம் கொடுத்து ஓட்டுநர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.

குறிப்பாக பிரித்தானியா இறுதியாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியபோது, ​​ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் இனி குறுகிய அறிவிப்பில் வேலை செய்ய முடியாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.