November 23, 2024

சர்வதேச விசாரணையே :பின்வாங்க மாட்டோம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் -வடகிழக்கு மாகாணம் ஜநா சபை ஆணையாளரிற்கு இன்று அனுப்பி வைத்துள்ள மகஜரில் 2009 மேயில் யுத்தம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசின் வாக்குறுதிகளை நம்பி, கையளிக்கப்பட்ட, தாமாகவே சரணடைந்த எமது உறவுகள்  வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று சர்வதேச வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டோர் தினம். உலகிலே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ள நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இலங்கையில் 1956ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.  அதன் உச்சகட்டமாக 2009 மேயில் யுத்தம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசின் வாக்குறுதிகளை நம்பி, கையளிக்கப்பட்ட, தாமாகவே சரணடைந்த எமது உறவுகள்  வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுள் குடும்பமாக சரணடைந்தவர்களும் உள்ளடங்குவர். அப்படி பெற்றோருடன் சரணடைந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுவர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அச் சிறுவர்கள் குழந்தைகள் எங்கே?  அவர்களுக்கு என்ன நடந்தது?  குழந்தைகள் உயிருடன் இருந்தால் அவர்களின் குறைந்த வயது 12 வருடங்களுக்கு மேலாக இருக்கும். இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து,  அவர்களை மீட்க  UNICEF, Child fund, Save the Children  உள்ளடங்கலான நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

குழந்தைகள் உட்பட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆகிய நாங்கள் இவர்களுக்கு நீதி கோரி 1653 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றோம்.  கடந்த காலங்களில் இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர்  தினத்தை இலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள நாங்கள் ஒன்றாக பாரிய அளவில் பேரணிகளை ஒழுங்கமைத்து உறவுகளைத் தேடும் போராட்டத்தை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றோம்.  ஆனால் இந்த வருடம் ஊழஎனை-19 ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால் பேரணி தடைபட்டு விட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சாட்சிகளான நம் கண்முன்னே சரணடைந்து ஒப்படைக்கப்பட்ட உறவுகள் இறந்துவிட்டார்கள் எவரும் உயிருடன் இல்லை என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

எமது உறவுகளை யாரிடம் ஒப்படைத்தோமோ, யாரிடம் சரணடைந்தார்களோ, அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்கள.; அவர்கள்; பொறுப்பற்ற விதத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் உயிருடன் இல்லை என்கின்றார்கள.; நீங்கள் இதை எப்படி கூற முடியும்? என்று இலங்கை அரசை கேள்வி கேட்க வேண்டிய சர்வதேசமும்  ஐ.நாவும் எமது உறவுகளை காணாமல் ஆக்கிய அவர்களிடமே நீதியை வழங்கும் பொறுப்பை ஒப்படைப்பது எந்த வகையில் பொருத்தமாயிருக்கும்?

முந்தைய ஆட்சியாளர்களால் ஐநாவின் வற்புறுத்தலின் பேரில் அவசர அவசரமாக ழுஆP அலுவலகம் அமைக்கப்பட்டது. ஐநாவின் 30ஃ1 தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட கலந்தாலோசனை செயலணியால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளை கணக்கெடுக்காது சர்வாதிகாரப் போக்குடன் உருவாக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு தெரியாது மிகவும் ரகசியமாக உருவாக்கப்பட்டது.  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆகிய நாங்கள் சட்டமூலம் உருவாக்கப்பட்டதிலிருந்து அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டியும் கலந்தாலோசனை செயலணியின் பரிந்துரைகளை உள்வாங்கும்படியும் வைத்த கோரிக்கைகள் எவற்றையும் பொருட்படுத்தவில்லை. எனவே அலுவலகம் திறப்பதை வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆகிய நாங்கள் கண்டித்து போராட்டங்கள் மேற்கொண்டோம்.  நமது போராட்டங்களுக்கு மதிப்பு கொடுக்காது அதிகாலை 5 மணிக்கு மிக ரகசியமாக யாழ்ப்பாணத்தில் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.கடந்த 12ம் திகதி (12.08.2021) அன்று கிளிநொச்சியில் மிக இரகசியமாக ழுஆP  அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.ஊடகவியலாளர்கள் கூட இரண்டொரு நாட்களின் பின்பே அறிந்து கொள்ளும் அளவிற்கு மிக, மிக இரகசியமாகத் திறக்கப்பட்டுள்ளது. கொவிட-19 பயணத்தடை அமுலில் உள்ள போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கே தெரியாது அவசரமாகவும்,, இரகசியமாகவும் இவ்வலுவலகத்தை திறக்க வேண்டிய தேவை என்ன?வருகின்ற செப்ரம்பரில் நடைபெற இருக்கும் ஐ.நா கூட்டத் தொடர்தான் இதற்கெல்லாம் காரணம்..என்பது வெளிப்படை. ,; பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பொறிமுறையை பாதிக்கப்பட்டவர்கள் நிராகரித்த போதும் அதை எங்கள் மீது திணிக்க ஐநா துணை போகலாமா?

எமது சங்கத்தின் பிரதிநிதிகள் ஐநா வளாகத்தில் வைத்து ஐநா பிரதிநிதி உட்பட்ட பன்னாட்டு பிரதிநிதிகளை சந்தித்து உரையாடும்போது ழுஆP தொடர்பிலான எமது  திருப்தியீனத்தை உரிய காரணங்களுடன் தெளிவுபடுத்தி இருக்கின்றோம். ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடரில் பிரதான நிகழ்வில் ழுஆP ஐ நிராகரிப்பதற்கான காரணங்களை பதிவு செய்திருக்கின்றோம்.

அத்துடன் OMP ஆல் நமக்கான தீர்வை வழங்கும் இயலுமை இல்லை என்பதை நிரூபித்து காட்டுவதற்காக 20.07.2019 இல் வலுவான சாட்சியங்களுடன் கூடிய ஐந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்கள் ஒப்படைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுக்காவது மூன்று மாதத்திற்குள் தீர்வு தரப்பட்டால் ழுஆP ஐ ஏற்றுக்கொள்வதாக கூறி இருந்தோம். இரண்டு வருடங்கள் கடந்தும் இதுவரை எந்த தகவலும் இல்லை. இனியாவது சர்வதேசமும் ஐநாவும் இந்த ழுஆPP இற்கு வலுவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு உடனடியாக ழுஆP ஐ மூடுவதற்கான அறிவுறுத்தலை வழங்க வேண்டும். சர்வதேச விசாரணையுடன் கூடிய நீதிப் பொறிமுறை எங்களுக்குதேவை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஐ.நா ஆணையாளர் அவர்களே!

அனுபவ ரீதியாக உணர்ந்து நிராகரிக்கப்பட்ட OMP ஐ உங்கள் அறிக்கைகளில் புகழ்ந்து பேசுவது காணாமலாக்கப்பட்ட எங்களுக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கின்றது. தயவுசெய்து உண்மையைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றோம். இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இன அழிப்புக்கு சர்வதேச விசாரணைகளுடன் கூடிய பொருத்தமான சர்வதேச நீதி பொறிமுறை ஒன்றை பரிந்துரையுங்கள். எம்முடன் போராடிய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். நீங்களும் எங்களைப் போன்று பாதிக்கப்பட்ட ஒருவர் என்ற ரீதியிலும், ஒரு பெண்ணால் தான் பெண்களின் துயரை புரிந்து கொள்ள முடியும் என்ற வகையிலும் நாம் இறப்பதற்கு முன்னதாக எங்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்யுங்கள். உங்கள் பதவிக் காலத்துக்குள்  எமக்கான தீர்வை காண உதவிடுங்கள்..

எதிர்பார்ப்புடன்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்