Mai 19, 2024

அவுஸ்ரேலியாவில் எதிர்பாளர்கள் காவல்துறையினர் மோதல்! பலர் கைது!!

ஆஸ்ரேலியாவில் மெல்பேர்ண் மற்றும் சிட்னி நகரங்களில் கோவிட் முடக்க நிலைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து போராட்டத்தை முன்னேடுத்தபோது காவல்துறையின் தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன.மெல்பேர்ணில் பேரணியில் கலந்துகொண்ட 4,000 பேர் காவல்துறையினரின் தடுப்பை உடைத்துக்கொண்டு சென்றதால் காவல்துறையினர் அவர்கள் மீது மிளகுத் தெளிப்பைத் தெளித்தனர். அத்துடன் 218 பேரைக் கைது செய்தனர். இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் 7 காவல்றையினர் காயமடைந்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவருக்கும் கோவிட் விதிமுறைகளை மீறியதற்காக 5,452 அவுஸ்ரேலிய டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறையினரைத் தாக்கியதாக மூன்று பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இதேபோன்று சிட்னியில் 1,000 வரையான எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். எனினும் அவர்களை அங்கிருந்து காவல்துறையினர் கலைத்திருந்தனர்.