தனித்து விடப்படும் இந்தியா?
அருகாகவுள்ள இலங்கை முதல் நாலாபுறமும் எதிரிகளை சந்தித்து வருகின்றது இந்தியா.ஒருபுறம் கோத்தா அரசு சீனா பக்கம் சாய்ந்துவிட தமிழ் மக்களோ டெல்லியுடன் முறுகி நிற்கின்றனர்.
இந்நிலையில் தலிபான்களும் முறுக தொடங்கியுள்ளனர்..ஆப்கானிஸ்தானில் கந்தகார் மற்றும் ஹெராட் நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்களைத் தலிபான்கள் சூறையாடியுள்ளதாக, இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூடப்பட்டிருந்த தூதரகங்களுக்குள் புகுந்த தலிபான்கள், ஆவணங்களை தேடியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது எதிர்பார்க்கப்பட்டது தான் என்று தெரிவித்துள்ள இது இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், உலக நாடுகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி தலிபான்கள் செயற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது எனவும், குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தூதரகம் மூடப்படுவதை விரும்பவில்லை என்றும், அங்கு பணியாற்றுவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என கட்டாரில் உள்ள தலிபான் அலுவலகத்தில் இருந்து இந்திய அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தூதரகங்கள் சூறையாடப்பட்டமைக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.