November 23, 2024

யேர்மனியில் கொரோனா தடுப்பூசிகளுக்குப் பதிலாக 8,000 பேருக்கு சேலேன் ஏற்றிய தாதி!! ஆரம்பமானது விசாரணைகள்!!

யேர்மனியின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள ஃப்ரைஸ்லேண்டில் உள்ள தடுப்பூசி மையத்தில்   கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக மருத்துவத் தாதி ஒருவர் 8,000 பேருக்கு அதிகமானவர்களுக்கு செலேனை ஊசியில் செலுத்தியுள்ளார். இதனால் அம்மக்களை மீண்டும் கொரோனா தடுப்பூசியைப் போடுமாறு அதிகாரிகள் கேட்டுவருகின்றனர்.

இதேநேரம் குறித்த விவகாரம் தொடர்பில் தடுப்பூசி மையத்தில் தாதியரின் நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையில், ஃபைசர்/பயோஎன்டெக் தடுப்பூசிக்கு பதிலாக இன்னும் பலருக்கு சேலேன் ஏற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கொரோனா நோயின் ஆபத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனத் தெரியவருகிறது.

தாதியரின் செயலை ஒரு அரசியல் உள்நோக்கம் தூண்டியிருக்கலாம் என்பதை காவல்துறை நிராகரிக்கவில்லை, இருப்பினும் அவளுடைய வழக்கறிஞர்கள் அதை நிராகரித்தனர். மேலும் அவர்கள் சேலேன்  பரிமாற்றத்தின் அளவுகளையும் மறுக்கிறார்கள்.

மேலும் சாட்சிகள் விசாரிக்கப்படுகிறார்கள், இதுவரை இந்த வழக்கில் எந்த குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படவில்லை.