Mai 13, 2025

ஸ்ரீலங்காவில் இனப்படுகொலையின் இரண்டாவது அலை!! கொத்தாக உயிரிழக்கும் மக்கள்

ஸ்ரீலங்கா அரசாங்கம் இனப்படுகொலையின் இரண்டாவது அலையை நிகழ்த்திவருவதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

கொரோனா தொற்றுக் காரணமாக ஸ்ரீலங்காவில் மக்கள் கொத்துகொத்தாக உயிரிழந்து வருவதற்கான முழுப்பொறுப்பையும் ராஜபக்ஷ அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றும் நேற்றைய தினம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்று வருவது கொரோனா உயிரிழப்புக்கள் அல்ல. இவை இனப்படுகொலைகளின் அலைகளாகும்.

தகுந்த நேரத்திற்கு தடுப்பூசிகளை அளிக்காமையினால் தான் இப்படியான உயிரிழப்புக்கள் இடம்பெற்று வருகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.