November 23, 2024

கோத்தாவுடன் பேச்சா?முடியாது!

கோத்தபாய ராஜபக்சவின்; காலத்தில்தான் அதிகமானோர் காணமால் ஆக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதே ஜனாதிபதி தற்போது; அரசுடன் பேச வருமாறு அழைப்பு விடுத்தும் வருகின்றார்.

ஆனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இறுதி யுத்தததில் சரணடைந்த உறவுகள் யாரும் இன்று உயிருடன் இல்லை என்றே ஜனாதிபதியும்  அவரது அமைச்சர்களும் கூறிவருகின்றனர்.

அத்தகையவர்களுடன் சென்று எங்களது பிரச்சினைகள் தொடர்பில் எவ்வாறு பேச முடியும்.எமது உறவுகளின் உயிருக்கு விலை மதிப்பில்லாத நிலையிலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதனாலும் நாங்கள் ஜனாதிபதியை சந்திக்க விரும்பியிருக்கவில்லையென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி த.செல்வராணி  தெரிவித்துள்ளார்.