பெரும் சமருக்கு தயாராகும் ரணில்
2024 ஆம் ஆண்டில் ஆட்சியை கைப்பற்றும் வகையில் 75 திட்டங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் 75 ஆவது சம்மேளனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், அதில் ஆட்சியை கைப்பற்றுவதற்கான உறுதியை அனைத்து கட்சி உறுப்பினர்களும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
அன்றைய தினத்திலிருந்து ஆட்சியை கைப்பற்றும் திட்டங்களை நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆரம்பிக்குமாறு ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
இலங்கையின் தேசிய அரசியலில் 2024 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ஒரு பெரும் சமராகவே அமையப்போகின்றது. இந்த தேர்தலை மையப்படுத்தி பிரதான கட்சிகள் அனைத்தும் பல வியூகங்களை வகுத்து வருகின்றன.
இதுவேளை – அடுத்த ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சி புதிய கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதுடன், பல தரப்புடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.