விடுதலைப் புலிகளின் சின்னம் தாங்கிய காலணிகள்? இலங்கை அரசாங்கம் நடவடிக்கை
நைக் நிறுவனத்தை மேற்கோள்காட்டி வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சனையுடன் சித்தரிக்கப்பட்ட நைக் (NIKE) முத்திரை காலணிகள் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியுள்ளமை குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நைக் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது, குறித்த உற்பத்தி, தம்மால் தயாரிக்கப்படவில்லை என அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தமது புலமைச் சொத்துக்களின் துஷ்பிரயோகம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நிறுவனத்தின் நடைமுறைக்கு ஏற்ப பொருத்தமான சட்ட அமுலாக்கம் நடைமுறைப்படுத்தப்படுமென நைக் நிறுவனம் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.