November 22, 2024

சீன ரகசியத்தை அம்பலப்படுத்தியது அமெரிக்கா

சீனா அதன் மேற்கு பிராந்தியத்தில் நிலக்கீழ் அணு உந்துகணை தளமொன்றை நிர்மாணித்துவருவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சீனாவின் அணு மேம்பாடு குறித்து அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தமது கரிசனைகளை வெளியிட்டுள்ளனர்.

சீனாவின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள ஷின்ஜியாங் மாகாணத்தில் அணு ஆயுத தளம் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றமை தொடர்பான செய்மதி நிழற்படங்களை அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் கன்சூ மாகாணத்தில் உள்ள யூமன் என்ற பாலைவனப் பகுதியிலும் இவ்வாறான உந்துகணை தளமொன்றை சீனா நிர்மாணித்துள்ளதாக கடந்த மாதம் வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் யூமன் பகுதியில் இருந்து வட மேற்காக 380 கிலோமீற்றர் தொலைவில் ஹமி என்ற இடத்தில் இப்புதிய உந்துகணை தளர்த்தை சீனா நிர்மாணித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 120 வரையான நிலக்கீழ் அணு உந்துகணை குழாய் களஞ்சியங்கள் அல்லது ஏவு தளங்கள் நிர்மாணிக்கப்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்