November 22, 2024

தென்னிலங்கையில் சில பகுதிகளில் வித்தியாசமாக தென்பட்ட சூரியன் – பார்வையிட படையெடுத்த மக்கள்

தென்னிலங்கையில் சில பகுதிகளில் சூரியனை சுற்றி வளையம் ஒன்று தோன்றியமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த நிலைமைக்கு நாங்கள் சூரிய மண்டலம் என்றே பெயரிட்டுள்ளோம்.

நீராவி மேல்நோக்கிச் செல்லும்போது, ​​அது பனி படிகங்களாக மாறும். இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக உயர் வளிமண்டலத்தில் மிகக்குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இதனால் அங்குள்ள நீர் சிறிய பனித்துகளா மாறி, சூரிய ஒளியை இவ்வாறு திரிபடைய செய்து வெளிப்படுத்துகிறது.

அவை சூரியனை சுற்றி வெள்ளை வட்டத்தை ஏற்படுவதனை அவதானிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.