சுதந்திரக்கட்சியை விட பொதுஜனபெரமுனவே பெரிது!
பங்காளிக்கட்சிகளது குத்துப்பாடுகளையடுத்து கோத்தாவுடன் நேரடிப்பேச்சை சுதந்திரக்கட்சி நடத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போதைய ஆளும் கூட்டணியில் முக்கிய கட்சி பொதுஜன பெரமுன என்பதை சுதந்திரக்கட்சி மனதில் கொள்ள வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர கரியவாசம் தெரிவித்துள்ளார்.
„சில சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள் இன்னும் அதே பழைய மனநிலையில் இருக்கிறார்கள், அதாவது அவர்கள் பிரதான கட்சி என்ற மனநிலையில் இருக்கிறார்கள், ஏனென்றால் முந்தைய கூட்டணிகளில் சுதந்திரக்கட்சி எப்போதும் பிரதான கட்சியாக இருந்து வந்தது. ஆனால் இப்போது பொதுஜன பெரமுனவே பிரதான கட்சி.
எனவே அரசியல் முதிர்ச்சியைக் கொண்ட அங்குள்ள தலைவர்கள் அதைப் புரிந்து கொண்டதாக நான் நினைக்கிறேன். சிலர் அதை உணராமல் பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். ஆனால், இவையெல்லாம் தீர்க்கப்பட்டு சாதகமாக முன்னேற முடியும் என்று ஒரு கட்சியாக நாங்கள் நம்புகிறோம் என்று நான் நினைக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.