März 29, 2025

பங்காளிகள் பிரச்சினை:கோத்தாவுடன் நேரடி!

 

மகிந்த மற்றும் பஸிலுடனான பேச்சுக்களில் பலனற்ற நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.

பங்காளிக்கட்சிகளிடையே பிளவு உச்சமடைந்துள்ள நிலையில் இச்சந்திப்பு கோத்தாவுடன் நேரடியாக நடந்துள்ளது.

கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவதாக தெரியவந்துள்ளது.

கட்சியின் தலைவர், சிரேஸ்ட உப தலைவர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, பொருளாளர் மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.