November 21, 2024

பிரித்தானியாவில் இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல்

1983 யூலை இன அழிப்பைத்தொடர்ந்து இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே

தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை தமிழ்மக்கள் தமது ஆன்மாவில் உரமேற்றிக் கொண்டதுமான நாள் யூலை 23 ஆகும்.

தமிழீழ மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் 1983ம் ஆண்டு மேற்கொண்ட இன அழிப்புப்போர் நடைபெற்று இந்த ஆண்டுடன் 38 ஆண்டுகள் ஓடிவிட்டன.

தொடர்ச்சியாக ஒருவார காலம் மேற்கொண்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இனப்டுகொலை  செய்யப்பட்டும் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் பெரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.

38ம் ஆண்டு நினைவேந்தலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இலக்கம் 10 டவுனிங் ஸ்ட்ரீட் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். நிகழ்வானது அகவணக்கத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.