இலங்கையில் பரவும் மற்றொரு நோய்! மக்களே அவதானம்
இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 15,161 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இவற்றில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 4,509 உறுதிப்படுத்தப்பட்ட டெங்கு நோயாளர்களும், கம்பாஹா மாவட்டத்தில் 1,905 உறுதிப்படுத்தப்பட்ட டெங்கு நோயாளர்களும் அடையாளம்
அதிக ஆபத்துள்ள சுகாதார பிரிவுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இதற்காக சுகாதார வைத்திய அதிகாரி பணிமானையின் கீழ் சிறப்புக் குழுக்கள் நிறத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு தடுப்பு பிரிவு கூறியுள்ளது.
மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பாஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்கள் டெங்கு நோய்க்கான அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, குருணாகல், கண்டி, சப்ரகமுவ, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களும் டெங்கு நோய் பரவலுக்கான அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேவேளை நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு திட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தேசிய டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஜிகா வைரஸ் பரவுவதற்கு இலங்கையின் சூழல் உகந்ததாக இருப்பதால், நுளம்புகள் குறித்து கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
டெங்கு நோய் தொடர்பான பின்வரும் அறிகுறிகள் காணப்படின் நோயாளியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்
- திரவ வகைகளைப் பருக முடியாதிருத்தல் (அடிக்கடி வாந்தயெடுத்தல்) உணவு
- பாண வகைகளை நிராகரித்தல்
- கடுமையான தாகம்
- நோயாளி சிறுநீர் கழிக்குமட தடவைகள் குறைவடைதல் ( 6 மணித்தியாலத்திற்கு கூடுதலான நேரத்திற்குள் சிறுநீர் வெளிவராமை)
- கடுமையான வயிற்று வலி
- தூக்க நிலைமை
- நடத்தையில் மாற்றம் ஏற்படல்
- சிவப்பு/ கறுப்பு/ கபில நிற வாந்தியெடுத்தல்
- கறுப்பு நிற மலம் வெளியாதல்
- குருதிப்பெருக்கு (முரசுகளிலிருந்து குருதிப்பெருக்கு, சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியாதல்)
- தலைசுற்றுதல்
- கைகால்கள் குளிரடைதல்