முகக்கவசமில்லை:ஆறு மாத சிறையாம்!
முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு இன்றுமுதல் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொழும்பின் பல்வேறு சன நெரிசல் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசமின்றி நடமாடுவதாக புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முகக்கவசமின்றி பொதுவெளியில் நடமாடுவது தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் குற்றமாகும். அந்த குற்றங்கள் நிரூபிக்கப்படும் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.