November 22, 2024

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் கோத்தா புலனாய்வு

கோத்தாபாயவின் இராணுவ புலனாய்வு துறை அவரை வெல்ல வைக்க ஈஸ்டர் தாக்குதலை நடத்தியதாக சந்தேகம் வலுத்துள்ளது.இதனை கத்தோலிக்க ஆயர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 260 அப்பாவி மக்களை பலி கொண்ட ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை இலங்கை புலனாய்வு உறுப்பினர்கள் சிலர் முன்னதாகவே அறிந்திருந்ததாகவும் அவர்களை தாக்குதலுக்கு முன்பே சந்தித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க கோட்டாபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது .

பேராயர் வணக்கத்துக்குரிய மல்கம் ரஞ்சித் அவர்களின் தலைமையில் ஈஸ்டர் தாக்குதலில்  பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய கத்தோலிக்க அமைப்பு கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது . ஈஸ்டர் தற்கொலை தாக்குதலை அரசு கையாளும் விதம் மிகவும் கவலையளிப்பதாகவும் , தாக்குதலாளிகளுக்கும் அரச புலனாய்வு உறுப்பினர்கள் சிலருக்கும் உள்ள தொடர்பு தொடர்பாக விசாரணை நடத்துமாறும், தாக்குதல் நிகழும் என முன்னதாகவே அறிந்தும் அசட்டையினமாக இருந்த முன்னாள் அதிபர் சிறிசேன மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது

இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான மேலோட்டமான அணுகுமுறையை கடைப்பிடித்தமைக்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயம் விசாரிக்கப்படவேண்டுமென அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்படுள்ளது.