இலங்கைக்கு கப்பல்:கௌதாரிமுனைக்கு பேருந்து!
கடல் கண்காணிப்பிற்கு அவுஸ்திரேலியா அரசு நீண்ட நாள் கடலில் தரித்து நிற்கும் கப்பலொன்றை இலங்கைக்கு கையளிக்கவுள்ளது.
இலங்கை ஜனாதிபதி,அமைச்சர் டக்ளஸ் கலந்து கொண்ட நிகழ்வில் அவுஸ்திரேலிய தூதர் மாதிரி கப்பலை கையளித்தார்.
சீன கடலட்டையால் பிரபலமாகியுள்ள பூநகரி கௌதாரிமுனைக்கு நாளாந்த பேருந்து சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் பூநகரியில் இருந்து கௌதாரிமுனைக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து காலை மற்றும் மாலை என இரண்டு சேவைகளை வழங்கி வந்தது.
இதனையறிந்த டக்ளஸ் வோனந்தா, கௌதாரிமுனைக்கான பகல் சேவை ஒன்றினை வழங்குவதற்கு மேற்கொண்ட பரிந்துரைக்கு அமைய, நாளை தொடக்கம் பூநகரி மற்றும் கௌதாரிமுனைக்கு இடையில் பகல் பேருந்து சேவை நடைபெறவுள்ளதாம்.