November 21, 2024

சமஸ்கிருதமாக்கி அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்…

சமஸ்கிருதமாக்கி அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்…

பூவை புஷ்பமாக்கி
அழகை சுந்தராக்கி
முடியை கேசமாக்கி
தீயை அக்னியாக்கி
காற்றை வாயுவாக்கி
பிணத்தை சவமாக்கி
கெட்டதை பாவமாக்கி
முகத்தை வதனமாக்கி
அறிவைப் புத்தியாக்கி
அவையை சபையாக்கி
ஆசானைக் குருவாக்கி
இசையை சங்கீதமாக்கி
குண்டத்தை யாகமாக்கி
பெரியதை மஹாவாக்கி
மக்களை ஜனங்களாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
அமிழ்தை அமிர்தமாக்கி
அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி
ஆடையை வஸ்திரமாக்கி
உணர்வற்றதை சடமாக்கி
ஓவியத்தை சித்திரமாக்கி
கலையை சாஸ்திரமாக்கி
விண்ணை ஆகாயமாக்கி
குளியலை ஸ்நானமாக்கி
தொழுதலை பூஜையாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
மாணவனை சிஷ்யனாக்கி
வேண்டுதலை ஜெபமாக்கி
முறைகளை ஆச்சாரமாக்கி
பத்தாம் நாளை தசமியாக்கி
திருவிழாவை உற்சவமாக்கி
பருவமடைதலை ருதுவாக்கி
உறக்கத்தை நித்திரையாக்கி
திருமணத்தை விவாகமாக்கி
பயணத்தை யாத்திரையாக்கி
செருப்பை பாதரட்ஷையாக்கி
படையலை நைவய்தியமாக்கி
பள்ளிகளை வித்யாலயமாக்கி
பிள்ளைப்பேறை பிரசவமாக்கி
வணக்கத்தை நமஸ்காரமாக்கி
அன்பளிப்பை தட்சணையாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
அறிவியலை விஞ்ஞானமாக்கி
படிப்பித்தலை அப்பியாசமாக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
வேளாண்மையை விவசாயமாக்கி
குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி

எப்படி எப்படி அழகு தமிழ்ச் சொற்கள்
அழிந்துள்ளன .

படித்ததில் பகிர்ந்தவை மா வை தங்கா

அனைத்து இடங்களிலும் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்த உறுதியேற்போம்.

தாய்மொழி, தமிழ்மொழியைப்பேணுவோம்…